கொடைக்கானல்: ஸ்வீடன் பெண் கொலை- வாலிபர் கைது
மதுரை:
கொடைக்கானல் தியான மையத்திலிருந்து காணாமல் போன ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடல், 1 மாதத்திற்குப் பிறகுதியான மையத்தின் அருகிலேயே புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 18 வயது வாலிபரை போலீசார்கைது செய்துள்ளனர்.
கொடைக்கானலில் உள்ள பெருமாள் மலையில் ஒரு ஜென் தியான மையம் உள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள்வருவது வழக்கம். இந்த தியான மையத்திற்கு கடந்த பிப்ரவரி 17ம் தேதி வந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரிட் மேரிஎன்குயிஸ்ட் என்ற 60 வயதுப் பெண்ணை மார்ச் 12ம் தேதி முதல் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இதன் பேரில் கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி தியான மையத்தின் அருகிலேயே ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்டிருப்பதாக போலீஸுக்குதகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார் விரைந்து சென்று தோண்டிப் பார்த்தபோது அந்த உடல், 1 மாதத்திற்கு முன்புகாணாமல் போன ஸ்வீடன் நாட்டுப் பெண்ணுடையது என தெரியவந்தது.
போலீஸார் அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மதுரை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் நடத்திய பிரேதப் பரிசோதனையின்போது அந்தப் பெண்ணின் உடலில்கழுத்து உள்ளிட்ட 5 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படைகள்அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.
விசாரணையில் 18 வயது நபர் ஒருவர் போலீசாரிடம் சிக்கினான். இவனும் மேலும் சிலரும் சேர்ந்து இக் கொலையைச் செய்ததாகத்தெரியவந்துள்ளது.
கொடைக்கானல் காவல் நிலையத்தில் வைத்து இந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications