தமிழகத்தில் எச்.ஐ.வி பாதிப்பு குறைகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் எச்.ஐ.வி வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம்தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
2003ம் ஆண்டு தமிழகத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 0.75 சதவீதமாக இருந்தது. இது200ல் 0.65 ஆக குறைந்துள்ளது.
பெண் செக்ஸ் தொழிலாளர்களிடையே எச்.ஐ.வி பாதிப்பு 2003ல் 8.8 சதவீதமாக இருந்தது. இது 2004ல் 4சதவீதமாக குறைந்து விட்டது.
இருப்பினும் ஓரினச் சேர்க்கை பழக்கமுடையவர்கள் மத்தியில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகரித்துள்ளது. 2003ல் 4.4சதவீதமாக இருந்த இதன் விகிதாச்சாரம் 2004ல் 6.8 ஆக அதிகரித்துவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications