இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும்: கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Karunanidhi with Ramadossதமிழ் உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளையும் மத்தியில் ஆட்சி மொழிகளாக்க வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் திருச்சிக்கு மேற்கொள்ளும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்க ஊர்திப் பயணத்தை கருணாநிதிசென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது கருணாநிதி பேசுகையில்,

நம்முடைய அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்கள் நல்ல நிலவில் இந்தப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். குளிர்ந்தநேரம். நேரம் குளிர்ந்திருக்கிறது. ஆனால் தமிழ் வளர வேண்டிய அளவிற்கு வளரவில்லையே என்ற கொதிப்புமட்டும் உள்ளத்திலே குடிகொண்டிருக்கிறது.

இதற்கு முன்னால் பேசியவர்கள், ஒரு பொருத்தமானவரை இந்த விழாவிற்கு வழியனுப்புவதற்குஅழைத்திருக்கிறோம் என்று கூறினார்கள். வழியனுப்புவதோடு நின்றுவிட்டால் நான் தப்பித்துக் கொள்ளமுயற்சிக்கிறேன் என்று பொருள்.

நீங்கள் சென்றடைகின்ற வழியில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டு தடுப்புச் சுவர் எழுப்பப்படுமேயானால் அதைஇடிப்பதற்கும் தயாராக வருபவனாக இருப்பேன். அந்த நம்பிக்கை இருப்பதால் தான் இவர்கள் என்னைஅழைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்.

சில சொற்களைப் பற்றி இங்கு எனக்கு முன்னால் பேசிய ஒருவர் கூறினார். தூய தமிழில் சில சொற்களைப்பயன்படுத்தினால் அது மன்றங்களிலேயே கேலி செய்யப்படுகிறது என்றார். கேலி செய்யப்படுகின்ற அந்தமன்றங்களுக்கு ஒரு காலத்தில் மன்றம் என்ற பெயரே கிடையாது.

அது சபா என்று வடமொழியிலும், அசெம்ப்ளி என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்பட்டு பிறகு நாங்கள் மன்றம்என்று அழைத்த போது கேலிக்கும், ஏளனத்திற்கும் ஆளானோம். இன்றைக்கு மன்றம் என்ற பெயர்அனைவருக்கும் பழக்கமானதாகி விட்டது.

தூய தமிழ் வார்த்தைகள் அடங்கிய பட்டியலை திறந்து வைத்த டாக்டர் ராமதாஸ்

சட்டமன்றத்தை பேரவை என்றும், பாராளுமன்றத்தை மக்களவை என்றோ, ராஜ்யசபாவை மாநிலங்களவைஎன்றோ நாம் அழைத்தபோது கேலி செய்யப்பட்டோம். ஆனால் இன்று யார் நம்மை கேலி செய்தார்களோஅவர்களே இந்த வார்த்தைகளை பயன்படுத்தும் நிலை வந்துள்ளது.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். அப்படிஅறிவிப்பதற்கு, பிராந்திய மொழிகளுக்கு இலக்கிய வளமில்லை, இலக்கண வளமில்லை என்று மத்திய அரசுநினைத்தால், அத்தனை வளங்களும் உள்ள தமிழை முதலில் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்.

சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 16 ஆக இருந்தாலும், இந்தி மட்டுமே தற்போது மத்தியில் ஆட்சிமொழியாக உள்ளது.

மொழிகளால் இந்தியா வேறுபட்டுள்ளது. எனவே அவற்றுக்கிடையே ஒற்றுமை வேண்டும். அதற்கு அனைத்துமொழிகளையும் ஆட்சி மொழியாக்குவதும், அவற்றை பாதுகாப்பதும்தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

புத்தம் புது தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படும்போதும், உருவாக்கப்படும்போதும் மக்களுக்கு அவைவினோதமாக தெரியும். ஆனால் அவற்றை பின்னர் அவர்கள் பழகிக் கொண்டு விடுவர்.

பிற மொழிகளுக்கு எதிராக நாம் போராடவில்லை. நமது மொழியின் நலனைப் பாதுகாப்பதுதான் நமது முக்கியநோக்கம் என்றார் கருணாநிதி.

சுனாமி நிவாரணம்:

இதற்கிடையே சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 4.6 லட்சத்தை திமுகஅளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கருணாநிதி ரூ. 1 கோடியை அளித்தார். அதன் பின்னர் திமுக சார்பில்பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நிதியுதவி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக சார்பான சன் டிவிதிரட்டிய நிதியும் பிரதமரிடம் அளிக்கப்பட்டது.

இந் நிலையில் மேலும் ரூ. 4.6 லட்சம் நிதியை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக அளித்துள்ளது. மத்தியஅமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் திமுக எம்.பிக்கள் குழு பிரதமரை சந்தித்து இந்த நிதியைஅளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+