காதல்-ஜாதி விவகாரம்: தங்கை, 7 மாத குழந்தையை வெட்டி கொன்ற அண்ணன்
திருச்சி:
காதல் திருமணம் செய்த சகோதரியையும், அவரது 7 மாத கைக் குழந்தையையும் அவரது அண்ணனே கூலிப்படையுடன் சேர்ந்துவெட்டிக் கொலை செய்தான்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் திருச்சியில் நடந்தது.
திருச்சி பெரிய கடைவீதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டையாவான இவரது மகன் சுரேஷ் குமார், நகைசெய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டில் வசித்த சாந்தி என்ற பெண்ணுடன் சுரேஷ் குமாருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் வேறு வேறுஜாதியை சேர்ந்தவர்கள்.
இந்தக் காதலுக்கு சாந்தியின் சகோதரர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந் நிலையில் சுரேஷ்குமாரும் சாந்தியும் கடந்தஆண்டு வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஜாதி வெறி பிடித்த சாந்தியின் சகோதரர்கள்இதனால் ஆத்திரமடைந்தனர்.
இந் நிலையில் நேற்று காலை தனது வீட்டில் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது அவரது அண்ணன் மணிகண்டன்5 பேர் கொண்ட கும்பலுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.
அந்தக் கும்பல் சாந்தியை சரமாரியாக வெட்டியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சாந்தியை வெட்டியஅந்தக் கும்பல் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையையும் விடவில்லை. குழந்தைதையும தலையில் வெட்டியது.
மேலும் ஆத்திரம் தீராத அந்தக் கும்பல், சுரேஷ் குமாரையும் அவரது தாயார் புஷ்பவல்லியையும் சரமாரியாக வெட்டிவிட்டுஅங்கிருந்து தப்பியோடிவிட்டது.
அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த புஷ்பவல்லி, சுரேஷ் குமார் மற்றும் 7 மாத குழந்தையும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications