இந்தியாவிலேயே.. விஜய்காந்த் பாணியில் பொன்னையன் புள்ளிவிவரம்
சென்னை:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள் என நிதியமைச்சர்பொன்னையன் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து இன்றுபொன்னையன் பேசுகையில் ரமணா பட விஜய்காந்த் மாதிரி புள்ளி விவரம் மூலம் கலக்கினார். அவர் கூறுகையில்
ஆந்திராவில் 7.5 கோடி மக்கள் உள்ளனர். அங்கு அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1.75 சதவீதம் ஆகும்.கர்நாடகத்தில் 5 கோடி பேர் உள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் விகிதம் 1.36 சதவீதமாகும்.
ஒரிஸ்ஸாவில் 3.5 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் 1.87 சதவீதம் பேர் அரசு ஊழியர்கள். குஜராத்தில் 4.75கோடி பேர் உள்ளனர். இவர்களில் 1.69 சதவீதம் பேர் தான் அரசு ஊழியர்கள்.
ஆனால், தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.5 கோடியாகும். இவர்களில் 2.13 சதவீதம் பேர் அரசு ஊழியர்கள்ஆவர். அதாவது இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு ஊழியர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான்.
இத்தனை ஊழியர்கள் இருந்தும், முதல்வரின் சிறப்பான நிர்வாகத்தின் காரணமாக தொய்வின்றி அரசுப் பணிகள்நடந்து வருகின்றன. நிர்வாகத்துறையில் நிதி வருவாய் பெருக்கம் அதிகரித்திருக்கிறது.
ரேசன் கடைகள் மூலமான பொது வினியோகம், பள்ளிக் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.குடிநீர் வினியோகம், சாலைப் பராமரிப்பில் 2வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்க புரட்சித் தலைவி அவர்கள்சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றார் நிதியமைச்சர் பொன்னையன்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications