குன்றக்குடி முருகன் கோவிலில் பணம், நகை திருடிய அதிகாரி கைது
குன்றக்குடி:
குன்றக்குடி சண்முகநாதர் கோவில் உண்டியலில் ரூ. 40,000த்தைத் திருடிய கோவில் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற குன்றக்குடி முருகன் கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்தக்கோவிலில் கடந்த 25 ஆண்டுகளாக பேஷ்கார் எனப்படும் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தனபாலன்.
தற்போது கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. உண்டியலில் காணிக்கையும்ஏராளமாகக் குவிந்து வருகிறது.
நேற்றிரவு கோவில் மூடப்பட்ட பின்னர் இரவு 11 மணியளவில் தனபாலன் மட்டும் மலையேறி மேலே சென்றுள்ளார். கோவின்உண்டியலின் சீலை உடைத்து பணம் மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்களை எடுத்துக் கொண்டு இறங்கியுள்ளார்.
அப்போது குன்றக்குடி போலீஸ் நண்பர்கள் இளைஞர் குழுவினர் அப் பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர். இவர்களிடம் தனபாலன்மாட்டினார். அவரை இளைஞர்கள் சோதனையிட்டபோது அவரிடம் நகையும் பணமும் இருந்தது.
இதையடுத்து அவரை அந்த இளைஞர்கள் போலீஸில் ஒப்படைத்தனர். நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில் கொள்ளையில் தனபாலுக்கு உடந்தையாக இருந்தாக கோவில் காவலாளிகளான சின்னையா, காசி மற்றும் கணேசன் என்ற ஒருநபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications