திருச்சியில் நாளை தமிழ்ப் பாதுகாப்பு மாநாடு
திருவண்ணாமலை:
தமிழைக் காக்க வேண்டுமானால், தமிழை ஆட்சி மொழியாக, அலுவலக மொழியாக, நீதிமன்ற மொழியாக, திருமண மொழியாக மாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் நாளை (சனிக்கிழமை) 3வது மொழிப் போர் மாநாடு நடக்கிறது.
இதில் பங்கேற்க தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்தும், பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையிலிருந்தும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பாண்டிச்சேரியிலிருந்தும், மூவேந்தர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் கன்னியாகுமரியிலிருந்தும் திருச்சியை நோக்கி ஊர்திப் பயணங்களை
மேற்கொண்டுள்ளனர். ஊர்திப் பயணமாக திருவண்ணாமலை வந்த ராமதாஸ் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
இதற்கு முன் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், இன்றும் தமிழ், என்றும் தமிழ் என்ற நிலை இருந்தது. இப்போது எங்கு தமிழ் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தான் மொழிக்காக எல்லோரும் சேர்ந்து பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
முன்பு பெரியாரும் அண்ணாவும் இந்தியை எதிர்த்து இரண்டு முறை மொழிப் போர் நடத்தினார்கள். இப்போது நடப்பது 3வது போர். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும்.
தமிழுக்கு எதிரானவர்களை அடையாளம் காண வேண்டும். நாம் ஒன்றுபட்டால் தமிழின் எதிரிகள் ஓடிப் போய்விடுவார்கள். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழை அழிக்க முயலும் மறைமுக முயற்சிகளை எதிர்க்கிறாம். அவ்வளவு தான்.
தமிழைக் காக்க வேண்டுமானால், தமிழை ஆட்சி மொழியாக, அலுவலக மொழியாக, நீதிமன்ற மொழியாக, திருமண மொழியாக மாற்ற வேண்டும்.
பேசுபவர் வாயை மணக்கவும், கேட்பவர் காதை இனிக்கவும் செய்யும் மொழி நம் தமிழ். அந்தத் தமிழைக் காக்க தலை தான் விலை என்றால் தலையைக் கொடுத்தும் காப்போம் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications