ஜெ. அறிக்கை: தலைமைச் செயலாளருக்கு கருணாநிதி வக்கீல் நோட்டீஸ்
சென்னை:
தன்னையும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களையும் குறை கூறியும்முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையைஎதிர்த்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், செய்தி விளம்பரத்துறை இயக்குனர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ்அனுப்பியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லை என்று கடுமையாக கண்டித்து முதல்வர்ஜெயலலிதா கடந்த 20ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஜெயலலிதாவின் தனிப்பட்ட இந்த அரசியல் அறிக்கை, தமிழக செய்தித் தொடர்புத்துறையின் மூலமாக வெளியிடப்பட்டிருந்தது.
அதில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை அலங்கார பொம்மைகள் என்றும் விமர்சித்திருந்தார், கருணாநிதியையும்மிகக் கடுமையாக சாடியிருந்தார்.
இந் நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், செய்தி விளம்பரத்துறைஇயக்குனர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கருணாநிதி சார்பில் அவரது வழக்கறிஞர் ஆர்.விடுதலை அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில்,
அடிப்படை ஆதாரம் இல்லாமல், தீய நோக்கத்துடன் கருணாநிதியையும், மத்திய அமைச்சர்களையும் இழிசொற்கள் மூலம்அவதூறு செய்யும் வகையில், வெளியிட்ட அரசியல் அறிக்கையை, அரசின் செலவில் அதிகாரப்பூர்வமாகவெளியிட்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற தனிப்பட்ட முறையில் அவதூறு செய்து வெளியாகும் அரசியல் அறிக்கைகள் அரசின் செலவில் அதிகாரப்பூர்வமாகவெளியிடக் கூடாது. இவ்வாறு வெளியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தலைமைச் செயலாளரின் கடமையாகும்.
பணி விதிகள், நன்னடத்தை விதிகளின்படி அரசியல் விமர்சனங்கள், பேச்சுக்கள் போன்றவை தொடர்பான பணிகளில் அரசுஅதிகாரிகள் ஈடுபடக் கூடாது. முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை, திமுக தலைவர் கருணாநிதியையும், மத்திய அமைச்சர்களும்நிந்தனை செய்யும் வகையில் குறுகிய எண்ணத்தோடு வெளியிடப்பட்டதாகும்.
இது மலிவான அரசியல் பிரசாரம். இதை வெளியிடத்தன் மூலம் அரசு இயந்திரத்தை நீங்களும் (தலைமைச் செயலாளர்), செய்திவிளம்பரத்துறை இயக்குனரும் தவறாகப் பயன்படுத்தி உள்ளீர்கள்.
எனவே, நீங்கள் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும். இதை வெளியிட்ட செய்தி விளம்பரத்துறை இயக்குனர்உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றுகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications