2014 ஆசிய விளையாட்டுப் போட்டி: உரிமை கோரும் இந்தியா
டெல்லி:
2014ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த உரிமை கோருவது என இந்தியா முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே ஒருமுறை இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தியுள்ளது. இந் நிலையில் 2014ம் ஆண்டுக்கான 17வதுஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியாவில் நடத்த உரிமை கோருவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை இன்று வழங்கியது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில், 2014ம் ஆண்டுக்கான ஆசியவிளையாட்டுப் போட்டியை நடத்த உரிமை கோருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டி அனேகமாக டெல்லியில் நடத்தப்படலாம். ஏனென்றால் 2010ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளுக்காகடெல்லியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதால் ஆசியப் போட்டிகளை நடத்துவதற்கு அதிக சிரமம் இருக்காதுஎன்றார்.
சீனா, அடுத்த ஒலிம்பிக் போட்டியையே நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரவுப் பணியில் பெண்களுக்கு அனுமதி:
அலுவலகங்களில் இரவு நேரங்களில் பணிபுரிய இதுவரை பெண்களுக்கு அனுமதி கிடையாது. தற்போது மாறிவரும்சூழ்நிலைகளுக்கு ஏற்ப அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களும் இரவு ஷிப்டுகளில் பணிபுரிய மத்தியஅமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ஜெய்பால் ரெட்டி கூறுகையில், அலுவலகங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்புஇருக்கும் பட்சத்தில் பெண்கள் பணிபுரியலாம். இதற்காக தொழிற்சாலைகள் சட்டம் 1946 திருத்தப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications