சட்டசபையை எதிர்க் கட்சிகள் இன்று முதல் 1 வாரம் புறக்கணிப்பு
சென்னை:
சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியை ஜாதியைக் குறிப்பிட்டு அமைச்சர் வளர்மதி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துசட்டப் பேரவையை இன்று முதல் ஒருவார காலத்துக்கு புறக்கணிக்க திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரான பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். அதில்கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை ஊரகத் தொழில்துறை அமைச்சர் வளர்மதி பேசுகையில் கருணாநிதியை இழிபடுத்தியும் அவர் பிறந்தசமூகத்தையும் அச் சமூகத்தின் தொழிலை கேவலப்படுத்தியும் அவதூறாகப் பேசினார்.
இதை எதிர்த்துக் கேட்ட திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதியை சபாநாயகர் காளிமுத்து வெளியேற்றினார். இதே போலகாங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை குறித்தும் அமைச்சர் கிண்டலடித்துப் பேசினார்.இதனால் அனைத்துக் கட்சிகளும் வெளிநடப்பு செய்யும் நிலை உருவானது.
மேலும் திங்கள்கிழமையும் அவைக் காவலர்களை விட்டு காங்கிரஸ், பாமக, இடதுசாரிக் கட்சி எம்எல்ஏக்களை சபாநாயகர்வெளியேற்றினார்.
சபாநாயகரின் முழு ஒத்துழைப்போடு, முதல்வர் ஜெயலலிதாவின் தூண்டுதலோடு, பேரவை மரபுகள்-விதிகளுக்கு மாறாக எதிர்க்கட்சியினரை கேவலப்படுத்தும் விதத்தில் ஆளும்கட்சியினர் பேசுவது வழக்கமாகிவிட்டது.
இதைக் கண்டித்து இன்று முதல் (29ம் தேதி) ஒரு வாரகாலத்துக்கு சட்டசபையை எதிர்க் கட்சிகள் புறக்கணிக்கின்றன.
ஒரு வாரத்துக்குப் பிறகும் இதே நிலை நீடித்தால் மீண்டும் ஜனநாக முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் கூடி அடுத்தகட்டநடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள்.
இது தொடர்பாக ஆளுநரிடம் முறையிடப் போவதில்லை. சபாநாயகர் காளிமுத்து மீது நம்பிக்கை போய் ரொம்ப நாள்ஆகிவிட்டது. ஒரு மரபுக்காகத் தான் அவரை மதித்து நடந்து வருகிறோம்.
வரும் 3ம் தேதி சட்டப் பேரவையில் அதிமுகவின் போக்கு குறித்து விளக்கும் கண்டனப் பொதுக் கூட்டம் சென்னைசிந்தாதிரிப்பேட்டையில் நடக்கும். இதில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பர் என்றார் அன்பழகன்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications