கருணாநிதி பேச்சை கேட்காதீங்கோ...: ஜெ அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருணாநிதியின் பேச்சைக் கேட்டு காங்கிரஸ், பாமக, இடதுசாரிக் கட்சியினர் ஏன் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா காட்டமாகக் கேட்டார்.

திமுக தலைவர் கருணாநிதியை அமைச்சர் வளர்மதி சாதியைக் குறிப்பிட்டு பேசியதைக் கண்டித்து இன்று முதல் வரும் ஏப்ரல் 1ம்தேதி வரை எதிர்க் கட்சிகள் சட்டசபை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

சுயேச்சை எம்எல்ஏவான அப்பாவு, அரசைக் கண்டித்து இன்று வெளிநடப்பு செய்துவிட்டார்.

இதனால் அவையில் அதிமுகவினரும் கூடவே 4 பாஜக எம்எல்ஏக்களும் மட்டும் இருந்தனர். எதிர்க் கட்சியினர் வரிசைகாலியாகக் கிடந்தது.

இந் நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,

சட்டசபையை புறக்கணித்ததன் மூலம் வாக்களித்த மக்களின் முதுகில் குத்திவிட்டார்கள், துரோகம் இழைத்துவிட்டார்கள் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்.

இந்தக் கட்சிகளின் வெளிநடப்பால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. எதிர்க் கட்சி எம்எல்ஏக்களுக்கும் தனிப்பட்ட முறையில்எந்த இழப்பும் இல்லை. உண்மையான இழப்பு அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்குத் தான்.

நான் வெளியிட்ட பல அறிவிப்புகளால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். வயிற்றில் பால் வார்த்தாகவாழ்த்துகிறார்கள். ஆனால், எதிர்க் கட்சியினர் வயிறு எரிகிறார்கள். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை நான் பார்த்ததே இல்லை.

நேற்று பேசிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் சட்டசபையில் சத்தம் போட்டார், கூச்சல் போட்டார். அவரைத் தேர்ந்தெடுக்கமக்களுக்காக ஏதாவது ஒரு கோரிக்கையையாவது அவர் இந்த அவையில் வைத்திருப்பாரா?

முன்பு சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணியில் இருந்து போட்டியிட்டு எம்எல்ஏவானார் இந்த எஸ்.ஆர்.பி. அப்போதுஇனிக்க இனிக்க பேசினார். பிரச்சாரத்தின்போது என் வாகத்தின் பின்னால் ஓடி வந்து இன்னும் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டுப்போங்கள் என்றார். நானும் பேசினேன். அவர் வென்றார். இன்று அதையெல்லாம் மறந்துவிட்டார்.

செய்த நன்றியை மறந்தவர்களுக்கு மன்னிப்பே இல்லை. அவர் எனக்கு நன்றி காட்டாததால் வருத்தமில்லை. ஆனால்,வாக்களித்த மக்களையும் அவர் மறந்துவிட்டார்.

கருணாநிதி எப்போதும் மக்கள் விரோத ஆட்சி தான் நடத்துவார். அவருக்கு அவரது எம்எல்ஏக்கள் கட்டுப்படுகிறார்கள்.கருணாநிதி பேச்சைக்கேட்டு அவர்கள் தங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், கருணாநிதிக்காககாங்கிரஸ், பாமக, இடதுசாரிக் கட்சியினர் ஏன் தலையில் மண்ணை அள்ளிப் போட வேண்டும்?

கண் இருந்தும் கருணாநிதி விரிக்கும் வலையில் ஏன் விழ வேண்டும்? கருணாநிதி தோண்டும் புதை குழியில் ஏன் விழவேண்டும்? இவர்கள் என்ன கருணாநிதியின் அடிமைகளா? அவரது சொல்லைக் கேட்டு மனசாட்சியைக் கொன்றுவிட்டு சபைக்குவராமல் புறக்கணித்திருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகள் விவசாயிகள், தொழிலாளர்கள் என்று வாய் கிழிய பேசுகிறார்கள். ஆனால், இன்று அவர்களுக்காக அறிவிப்புவெளியிடும்பேது அதைக் கேட்க கம்யூனிஸ்டுகளுக்க மனமில்லை.

வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த எதிர்க் கட்சிகளை மக்களும் புறக்கணிப்பார்களை, அந்தக் கூட்டணியை விட்டு மக்களும்வெளிநடப்பு செய்வார்கள் என்றார் ஜெயலலிதா.

அவரது பேச்சை இதை அதிமுக எம்எல்ஏக்கள் மிக பலமாக மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+