புதிய போப்பாண்டவராக இந்தியருக்கு வாய்ப்பு
டெல்லி:
போப் ஆண்டவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதால் அடுத்த போப்பாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது போப் ஆண்டவராக இருக்கும் இரண்டாம் ஜான் பாலுக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு குழாய்வழியாகத் தான் உணவு வழங்கப்படுகிறது.
அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு விரைவில் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து யார் புதிய போப்பாகவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் பரவியுள்ளது.
வழக்கமாக 120 பேர் கொண்ட கர்டினல்கள் குழு வாடிகன் நகரில் கூடி புதிய போப்பை தேர்வு செய்வார்கள்.
புதிய போப்பாக ஆசிய, ஆப்பிரிக்க, மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த கர்டினால்களில் ஒருவர் தான்தேர்வுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நைஜீரிய நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் அரின்ஸ் மற்றும் ஆஸ்கார் ரோட்ரிக்ஸ்மரடியாகா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந் நிலையில் "பிசினஸ் வீக் என்ற இதழ், மும்பையைச் சேர்ந்த கர்டினல் இவான் டயஸ் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புஇருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இவான் டயஸ் உலகின் முக்கிய 10 கர்டினல்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். போப் பதவிக்கு அடுத்த பதவியானகர்டினல் பதவியை வகிக்கும் இவர் ஆசிய நாடுகளில் இருந்து பிரதிநிதித்துவம் பெற்றுள்ள ஒரே கர்டினல் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மும்பை பாந்த்ரா பகுதியில் 1936ம் ஆண்டு பிறந்த இவர், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மும்பை கத்தோலிக்க இயக்கத்தில்சேர்ந்து பணியாற்றினார். பிறகு படிப்படியாக உ.யர்ந்து உலக அளவில் முன்னணி கர்டினல்களில் ஒருவரானார்.
மும்பை ஆர்ச் பிஷப்பாக பணியாற்றிய இவரை உலகின் பல நாடுகளுக்கு நல்லெண்ண தூதுவராக போப் ஆண்டவர் நியமித்தார்.ரோம் நகரிலும் பல பதவிகளை வகித்துள்ளார். இந்தியாவைத் தவிர உலகம் முழுதும் பெரும்பான்மையான நாடுகளில்கத்தோலிக்க திருச்சபைகளில் இவருக்கு செல்வாக்கு உண்டு.
அல்பேனியா, தென் கொரியா, டோகோ, கானா, பெனின் ஆகிய நாடுகளுக்கு வாடிகன் தூதுவராக இருக்கும் இவர் பல முக்கியநிகழ்ச்சிகளின் போது போப் ஆண்டவருக்கு பதிலாக புனித தந்தையாக இருந்துள்ளார்.
அல்பேனிய நாட்டில் பல கத்தோலிக்க ஆலயங்களை சீரமைக்கும் பணியை இவர் சமீபத்தில் முடித்தார். இது இவரது முக்கியசாதனையாக கருதப்படுகிறது.
அடுத்த போப்பாக வருபவருக்கு உலகின் முக்கிய மொழிகளை நன்கு பேசத் தெரிந்தவராகவும், மக்கள் பிரச்சினைகளில்தெளிவான முடிவெடுப்பவராகவும் இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
இவான் டயஸுக்கு மொத்தம் 16 மொழிகளில் பேசவும், எழுதவும் தெரியும். மறைந்த அன்னை தெரசாவின் நம்பிக்கைக்குப்பாத்திரமானவரகாவும் இவர் இருந்தார்.
எனவே அடுத்த போப்பாக வருவதற்கு இவான் டயஸுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக பிசினஸ் வீக் கூறுகிறது.
இதே போல மேலும் பல சர்வதேச பத்திரிகைகளும் இவான் டயஸுக்குத் தான் அடுத்த போப்பாக வருவதற்கு வாய்ப்புகள்அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications