தனிக்கோர்ட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் தனி நீதிமன்றத்தின்ஆயுள்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது1997ம் ஆண்டு 3 தனி நீதிமன்றங்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்அமைக்கப்பட்டன. இவற்றில் 2 நீதிமன்றங்கள் கடந்த 2002ம் ஆண்டு கலைக்கப்பட்டன. ஒரு நீதிமன்றம் மட்டும் இயங்கிவருகிறது.

இந்த நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீதான ஊழல்வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் ஆயுள்காலம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து தனி நீதிமன்றத்தின் ஆயுள்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க தமிழக அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. அதை ஏற்று தமிழக அரசு மேலும் 6 மாதங்களுக்கு அதாவது செப்டம்பர்30ம் தேதி வரைநீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+