தஞ்சை மாநாடு வரலாறு படைக்கும்: கோ.சி.மணி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாடு மிகப் பிரமாண்டமானதாக அமையும், வரலாறு படைக்கும் என்று மாநாட்டுவரவேற்புக் குழுத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணி கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் மண்டல மாநாட்டை நடத்துகிறது திமுக. இதற்கான ஏற்பாடுகள் தீவீரமாக நடந்துவருகின்றன.

தஞ்சாவூர் புறநகர்ப் பகுதியான மேலவாசச்சாவடி பகுதியில் 4 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டுவருகிறது. 900அடி அகலம் 500 அடி நீளத்தில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. 65க்கு50 என்ற அளவில் பிரமாண்டமேடையும் போடப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தினர், முக்கியப் பிரகர்கள் தங்குவதற்காக மாநாட்டு வளாகத்திலேயே ஏ.சி.அறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாநாட்டுத் தோரண வாயில் கிரேக்க அரண்மனை போல அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டையொட்டி தஞ்சை நகரின் 100இடங்களில் வரவேற்பு வளைவுகளும் வைக்கப்பட்டு வருகின்றன.

மாநாடு குறித்து கோ.சி.மணி கூறுகையில், எங்களது கடந்த கால அனுபவங்களை வைத்து இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளைசெய்து வருகிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமானதாக இந்த மாநாடு அமையும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+