200 கோடி மோசடி: துபாயில் பதுங்கியவர் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்தியன் வங்கியில் போலி நிறுவனங்களின் பெயரில் ரூ. 200 கோடி வரை மோசடி செய்து விட்டு துபாய்க்குத் தப்பி ஓடிய நபரை9 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சென்னை கொண்டு வந்துள்ளனர்.

கடலூரைச் சேர்ந்தவர் வரதராஜுலு. இவர் போலியான நிறுவனங்களின் பெயரில், இந்தியன் வங்கிக் கிளைகள் பலவற்றில் ரூ. 200கோடி வரை கடன் பெற்று விட்டுத் தலைமறைவானார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவான இவரைப் பிடிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால்வரதராஜுலு, மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளுக்கும் சென்று கொண்டிருந்தார். அவரைப் பிடிக்க இன்டர்போல்போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் துபாயில் வரதராஜுலு தலைமறைவாக இருப்பதாக சென்னை சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.இதையடுத்து சிபிஐ தனிப்படை துபாய் விரைந்து சென்று வரதராஜுலுவை கண்டுபிடித்தது.

அவரை விமானம் மூலம் இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சென்னைக்குக் கொண்டு வந்து முறைப்படி கைது செய்தனர். அவரிடம்சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+