ஆற்காடு இளவரசருக்கு பர்னாலா பாராட்டு
சென்னை:
மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஆற்காடு இளவரசர் பாடுபட்டு வருவதற்கு தமிழக ஆளுநர் எஸ்.எஸ். பர்னாலாபாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆற்காடு இளவரசரின் மாளிகையான அமீர் மஹாலுக்கு பர்னாலா சென்றார். அவரைஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி ஆஸிம் மற்றும் அவரது மனைவி பேகம் சயீதா அப்துல் அலி ஆகியோர்மாலை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் அமீர் மஹாலை சுற்றிப் பார்த்த பர்னாலா, சுமார் 15 நமிட நேரம் அங்கு இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பர்னாலாபேசுகையில், தனது முன்னோர்களைப் போலவே, ஆற்காடு இளவரசரும், மத நல்லிணக்கத்தை வளர்ப்பது, சமூக சேவைஆகியவற்றில் அதிக நாட்டம் காட்டி வருவது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது.
வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலம். ஆற்காடு நவாபுகளின் அரண்மனைகள்அனைத்தையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள பறிமுதல் செய்து கொண்டதால், அமீர் மஹாலில் தங்க வேண்டிய நிர்பந்தம் ஆற்காடுநவாபுகளுக்கு ஏற்பட்டது.
நாட்டு விடுதலைக்கு முன்பிருந்தே மக்கள் நலனுக்காக பாடுபட்டவர்கள் ஆற்காடு நவாபுகள். இன்றும் அந்த பாரம்பரியம்தொடர்ந்து வருவது மகிழ்ச்சி தருகிறது என்றார் பர்னாலா.
ஆற்காடு இளவரசர் கூறுகையில், 1867ம் ஆண்டு முதலே தமிழக ஆளுநராக பதவியேற்றவர்கள், அமீர் மஹாலுக்கு வருவதுபாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது. தற்போது பர்னாலா இரண்டாவது முறையாக இங்கு வருகை தந்துள்ளார் என்றார்.
ஆளுநருடன், தமிழக அரசின் தலைமை காஜியார் சலாஹுதீன் முகம்மது அயூபும் உடன் வந்தார்.












Click it and Unblock the Notifications