பார்த்திபனின் காரில் திடீர் தீ
சென்னை:
நடிகர் பார்த்திபனின் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் பார்த்திபனின் வீடு சென்னையிலுள்ள கே.கே.நகர் பி.டி..ராஜன் சாலையில் உள்ளது. பார்த்திபன் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக வெளியூருக்கு சென்றிருந்தார்.
இந் நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேவா கார் திடீரென தீப்பிடித்துஎரிந்தது. இதைப் பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர், உடனடியாக தீயணைக்கும் படைக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைக்கும் படையினர் தீயை அணைத்தனர்.
இந்தக் கார் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இதனால் தான் எளிதில் தீப்பிடித்துக் கொண்டதாககூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications