பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி:
பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது சரி தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருச்சி அருகே ஆசிரமம் அமைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தவர் பிரேமானந்தா. வாயிலிருந்து லிங்கம் வரவழைப்பது,அந்தரத்திலிருந்து திருநீறு , குங்குமம் வரவழைப்பது என பல சித்து விளையாட்டுகள் மூலம் பக்தர்களை ஆச்சரியத்தில் மூழ்கவைத்தார். இவரது புகழைக் கேட்டு ஏராளமான வெளிநாட்டை சேர்ந்தவர்களும் பிரேமானந்தாவுக்கு பக்தர்களானார்கள்.
இந் நிலையில் தான் பிரேமானந்தா மீது ஆசிரமத்திலிருந்த 13 பெண்களை கற்பழித்ததாகவும், ஒரு வாலிபரை கொலைசெய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 1997ம் ஆண்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனைவழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பிரேமானந்தா அப்பீல் செய்தார்.
உயர் நீதிமன்றத்தில் பிரேமானந்தாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதன்பிறகும் மனம் தளராத அவர்,உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு நீதிமன்றங்களிலும் பிரேமானந்தாவுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை சரிதான் என இன்று தீர்ப்பளித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications