தெலுங்கில் "மாட்லாடிய" ஜெ !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெலுங்கில் கேட்ட கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா தெலுங்கிலேயே பதில் அளித்தார்.

சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத், உகாதி பண்டிகை குறித்து தெலுங்கில் கேள்வி கேட்டார். இதற்கு முதல்வர்ஜெயலலிதா எழுந்து தெலுங்கிலேயே பதிலளித்தார்.

பின்னர் அதை தமிழில் மொழி பெயர்த்துக் கூறிய ஜெயலலிதா, உகாதி பண்டிகைக்கு தமிழக அரசு விடுமுறை உண்டா என்றுஉறுப்பினர் கேட்கிறார். இந்த ஆண்டு உகாதி பண்டிகை சனிக்கிழமை வருகிறது. உகாதி பண்டிகையை அறிவிக்கப்பட்டவிடுமுறை நாட்கள் பட்டியலின் கீழ் கொண்டு வர பரிசீலனை செய்யப்படும் என்றார்.

ஜெயலலிதா தெலுங்கில் பேசுவது இது முதல் முறையல்ல. இருப்பினும் ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட உறுப்பினர்கள் தெலுங்கில் கேள்வி கேட்கும்போது சுத்தத் தெலுங்கில் பதில் கூறுவது ஜெயலலிதாவின்வழக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+