மயூரணி கொலை: மாணவருக்கு ஆயுள் சிறை
மதுரை:
இலங்கை மாணவி மயூரணி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவர் பாலபிரசன்னாவுக்கு மதுரை நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள்சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகள் மயூரணி. இவர் மதுரையிலுள்ள அம்பிகா கலைக்கல்லூரியில் படித்து வந்தார். அண்ணாநகரிலுள்ள இந்தக் கல்லூரியின் உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமானசோலைமலைத் தேவரின் வீட்டில் தங்கி இவர் படித்து வந்தார்.
அந்த வீட்டின் இன்னொரு அறையில் இலங்கையை சேர்ந்த பாலபிரசன்னா என்ற மற்றொரு மாணவரும் தங்கி கல்லூரியில் படித்துவந்தார்.
இந் நிலையில் மயூரணி, கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதியன்று சோலைமலைத் தேவரின் வீட்டில் வைத்து கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக சேலைமலைத் தேவர், அவரது மனைவி ராக்கம்மா, மாணவர் பால பிரசன்னா, இவரது நண்பர்ஹாஜி அலி, வேலைக்காரன் வீரண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முதலில் இந்த வழக்கு சோலைமலைத் தேவருக்குஎதிராக திரும்பியது. மயூரணி உடை மாற்றுவதை சோலைமலைத் தேவர் ஒளிந்திருந்து ரசித்ததாகவும், இதைப் பார்த்து விட்டமயூரணி பிரச்சினை செய்ததால் பாலபிரசன்னாவை வைத்து மயூரணியை அவர் கொலை செய்ய வைத்ததாகவும் புகார்கூறப்பட்டது.
போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மாணவர் பாலபிரசன்னா தான் பணத்திற்காக மயூரணியை கொலை செய்தார்என்று கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தீர்ப்பு வழங்கினார்.
மயூரணியை கொலை செய்ததற்கு மாணவர் பாலபிரசன்னாவுக்கு ஆயுள் தண்டனையும்,. அவரது பொருட்களைகொள்ளையடித்ததற்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் மொத்தம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் தீர்ப்பு வழங்கினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications