பாப்பாபட்டி: மூமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
மதுரை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தலை நடத்த கோரி மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் மதுரையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக தலித் மக்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்வதில்லை. அப்படியே போட்டியிட்டு வெற்றி பெற்றாலும்,அடுத்த நிமிடமே பதவியை ராஜினாமா செய்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் மதுரையில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் திமுக,விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை கலந்து கொண்டன.
இக்கூட்டத்திற்குப் பின்னர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 3தலித் பஞ்சாயத்துக்களிலும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலித்துகள் யாரும்வேட்பு மனு தாக்கல் செய்ய முன்வராத நிலை காணப்படுகிறது.
இதற்கு இடையூறாக இருப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைசெய்ய அரசு தவறினால், உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications