பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் மீண்டும் தேர்தல் நாடகம்!
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு மீண்டும் தேர்தல் நாடகம் நடக்கப் போகிறது.
இந்தப் பஞ்சாயத்துகளின் தலைவர் பதவி தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக இங்கு தேர்தலே நடத்த முடியாத சூழல்நிலவுகிறது. இங்கு வசிக்கும் ஆதிக்க சாதியினர், தலித்களை தலைவராக ஏற்க மறுத்து தேர்தலே நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர்.
அதையும் மீறி வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தலில் வென்றுவிட்டாலும் பதவிப் பிரமாணம் எடுக்க விட மாட்டார்கள். வெற்றி பெற்றகையோடு பதவியை ராஜினாமா செய்ய வைப்பார்கள். மீறினால் உயிருடன் இருப்பது நிச்சயமில்லை.
இப்படியாக இந்த தலித் பஞ்சாயத்துகளில் ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது.
ஜாதியின் பெயரால் இந்த ஜனநாயக படுகொலை நடப்பது ஓராண்டு, இரண்டாண்டுகளாக இல்லை. ஏழுஆண்டுகளாக நடக்கும் கொடூரம் இது.
சரி இந்த விஷயத்தில் அரசாவது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமே. அதுவும் ஆதிக்க ஜாதியினருக்கு ஆதரவாகவேசெயல்பட்டு வருகிறது.
அரசியல் சட்ட கடமைப்படி தேர்தலை அறிவிப்பது, அதை நடத்துவது என்ற அளவோடு அரசு நின்று கொள்கிறது. தேர்தலில் போட்டியிடும்தலித்துக்கு பாதுகாப்பு தருவது, அவரை மிரட்டும் மாற்று ஜாதியினரை ஒடுக்குவது, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது போன்றகடமைகளைச் செய்வதில்லை.
கலெக்டரும் மாவட்ட எஸ்பியும் கூட்டம் போடுவார்கள். பேசுவார்கள், கெஞ்சுவார்கள். தலித்தை தலைவராக ஏற்க அந்தக் கூட்டத்திலும்ஆதிக்க ஜாதியினர் மறுப்பார்கள். அத்தோடு கூட்டம் முடிந்துவிடும்.
இப்படியாக இந்த மூன்று பஞ்சாயத்துகளிலும் பல ஆண்டுகளாக ஜனநாயகம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டுக்கான கண்ணாமூச்சி விளையாட்டும் அறிவிக்கப்பட்டது. அதாவது இந்த பஞ்சாயத்துகளுக்கு தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறையைப் போலவே இந்த முறையும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தான் தைரியமாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு நரசிங்கம் என்பவரும், கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு பூங்கொடிஎன்பவரையும் வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்து அவர்களுக்கு இரவும் பகலும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைஅமைப்பு தொண்டர்கள்.
உடனடியாக ஊர் மக்கள் என்ற பெயரில் போட்டிக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பாப்பாபட்டியில் பொன்னையாஎன்பவரும், அவருக்கு மாற்று வேட்பாளராக பெரியகருப்பன் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கீரிப்பட்டியிலும் அழகுமலை என்பவரும் அவருக்கு மாற்று வேட்பாளராக மதிப்பு என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாட்டார்மங்கலத்தில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
வேட்பு மனுவை வாபஸ் பெற நாளையே கடைசி நாளாகும். வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. 20ம் தேதி ஓட்டு எண்ணிக்கை. 26ம் தேதிவென்றவர் பதவியேற்பார்.
இதெல்லாம், திட்டமிட்டபடி தேர்தல் நடந்து, முடிந்து, வென்றவரை ஆதிக்க ஜாதியினர் ராஜினாமா செய்ய வைக்காவிட்டால் நடக்கும்சமாச்சாரம். அது நடக்குமா?
2003ம் ஆண்டில் கீரிப்பட்டியில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த 2 தலித்களும் கடைசி நாளில் மனுக்களைவாபஸ் பெற வைக்க நிர்பந்திக்கப்பட்டதால் தேர்தல் ரத்தானது.
அதே ஆண்டில், பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தேர்தலில் நின்று, வென்று, தலைவராகப்
பதவியேற்ற அழகர்சாமி, அடுத்த நிமிடமே தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து விட்டார். அவருக்கு ஆதிக்க ஜாதியினரிடம் இருந்துவந்த மிரட்டலே இதற்குக் காரணம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications