ரவி சுப்பிரமணியத்திடம் நாளை குறுக்கு விசாரணை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நாளை அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்திடம் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
ஜெயேந்திரருக்கும் பெண்களுக்கும் தொடர்பு, சங்கரராமன் கொலைத் திட்டத்தில் காஞ்சி மடத்துக்கு தொடர்பு இருப்பதாக ரவிசுப்பிரமணியம் கூறியது குறித்து ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்துவர்.
அப்போது ஜெயேந்திரரை பல பெண்களுடன் தவறான கோலத்தில் பார்த்திருப்பதாகவும், அவர் புளு பிலிம் கூட பார்ப்பார் என்றும் ரவிகூறினார். மேலும் சங்கரராமன் கொலைக்கு ஜெயேந்திரர் ரூ. 50 லட்சம் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ரவி இவ்வாறு கூறியதை அப்போதே ஜெயேந்திரரின் வழக்கறிஞர் மறுத்தார்.
இந் நிலையில், ரவி சுப்பிரமணியத்தை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் தினகரன்,தியாகராஜன், சண்முகம் ஆகியோர் நீதிபதி உத்தமராஜனிடம் மனு அளித்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி உத்தமராஜன், 11ம் தேதி திங்கள்கிழமை குறுக்கு விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார். அதன்படிநாளை (திங்கள்கிழமை) ரவி சுப்பிரமணியத்திடம் குறுக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
இதையொட்டி ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 24 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.












Click it and Unblock the Notifications