பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து முரசொலி அலுவலகம்!
சென்னை:
தலித் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து முரசொலி அலுவலகம்கட்டப்பட்டுள்ளதாகவும், அதை மீட்க ஜூன் முதல் வாரம் போராட்டம் நடத்தப் போவதாகவும் தலித் அமைப்பானமண்ணின் மைந்தர்கள் கழகம் அறிவித்துள்ளது.
பஞ்சமி நிலம் என்பது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலித் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட நிலமாகும். இன்றுஇந்த நிலங்கள் தலித் சமுதாயத்தினரிடமே இல்லை.
இந் நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அமைந்துள்ள அலுவலகம், பஞ்சமி நிலத்தைஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக மண்ணின் மைந்தர் கழகம் என்ற அமைப்பு புதிய புகாரைக் கூறியுள்ளது.
இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பார்வேந்தன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பிற சமுதாயத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறி வருகிறார்.ஆனால் திமுகவின் நாளேடான முரசொலி அமைந்துள்ள அலுவலக இடமே பஞ்சமி நிலம் தான்.
பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துத்தான் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்பதற்காக,ஜூன் மாதம் முதல் வாரத்தில், மண்ணின் மைந்தர் கழகம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தத்திட்டமிட்டுள்ளோம்.
சுய லாபத்திற்காகவே தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர் ராமதாஸும்,திருமாவளவனும். இந்த அமைப்பு உண்மையான நோக்கத்துடன் செயல்படவில்லை என்றார் பார்வேந்தன்.
பார்வேந்தனை அதிமுக தலைமை தான் பின்னணியில் இருந்து இயக்குவதாக திமுக கூறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications