அதிமுக தட்டியை அகற்றியதாக அப்பாவு எம்எல்ஏ கைது
பணகுடி:
அதிமுக தட்டி போர்டை அகற்றியதாக ராதாபுரம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. அப்பாவு கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பனகுடி ஊராட்சியில், குடிநீர் வசதியை செய்து தருவது தொடர்பாக அப்பாவுக்கும், ஊராட்சித் தலைவியானஅதிமுகவைச் சேர்ந்த வனிதாவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
அப்போது பனகுடியில் இரண்டு இடங்களில், சங்கருக்கு எதிராக அதிமுகவினரால் வைக்கப்பட்டிருந்த தட்டியைப் பார்த்தஅப்பாவு, அவற்றை அகற்றுமாறு தனது ஆதரவாளர்களிடம் கூறினார். அவரும் காரிலிருந்து இறங்கி தட்டிகைளை அகற்றினார்.
இதுகுறித்து வனிதாவுக்குத் தகவல் போனது. இதைத் தொடர்ந்து வனிதாவும், அவரது ஆதரவாளர்களும் விரைந்து வந்தனர்.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அப்பாவுவின் காரை அவர்கள் அடித்து நொறுக்கினர். அப்பாவுவின் காரின் முன் பக்கக்கண்ணாடியில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டடு விட்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து அப்பாவுவின் கார் டிரைவர் மணி பணகுடி போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து வள்ளியூர் டிஎஸ்பி சிங்காரவேலு தலைமையில் போலீஸார் விரைந்து சென்று காரை பார்வையிட்டு விசாரணைநடத்தினர்.
இந் நிலையில் பஞ்சாயத்துத் தலைவி வனிதாவும் போஸீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அப்பாவு மற்றும் 13வது வார்டுகவுன்சிலர் சங்கர் ஆகியோரைப் பற்றி அதிமுக சார்பில் கண்டன தட்டிபோர்டுகள் வைத்திருந்தோம். அதை அப்பாவுஎம்.எல்.ஏவும், அவரது ஆதரவாளர்களும் அகற்றிவிட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுகூறியிருந்தார்.
இதற்கிடையே கார் உடைக்கப்பட்ட இடத்தில் அப்பாவு எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டார். காரைசேதப்படுத்திய பஞ்சாயத்து தலைவி வனிதா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கோரினார்.
இந் நிலையில் எம்.எல்.ஏவின் புகாரின்படி பஞ்சாயத்து தலைவி வனிதாவையும், வனிதாவின் புகாரின்படி (தட்டியைஅகற்றியதாக!!!) அப்பாவு எம்எல்ஏ, கார் டிரைவர் மணி, ரவி, மைதீன் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இச் சம்பவத்தால் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அரசை கடுமையாக விமர்சித்து வரும்அப்பாவுவை அரசு பல முறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட அப்பாவு பாளையங்கோட்டை சிறையிலும், வனிதா கொக்கிரக்குளம் மகளிர் சிறையிலும்அடைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications