மாநகராட்சி இடைத் தேர்தல்: டிஜிபியிடம் பாதுகாப்பு கோரும் திமுக
சென்னை:
வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள சென்னை மாநகராட்சிக்கு வார்டு இடைத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றுடிஜிபி அலெக்சாண்டர், மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் ஆகியோடம் இன்று திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி வார்டு எண் 110 மற்றும் 131 ஆகியவற்றுக்கு வரும் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந் நிலையில் இதே குழு இன்று டிஜிபி அலெச்காண்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தது. அதில், ஏற்கனவே 7வது வார்டுக்குநடந்த இடைத் தேர்தலின்போது ஆளுங்கட்சியினர் பெருமளவு வன்முறையில் ஈடுபட்டனர்.
எனவே வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலின்போதும் ஆளுங்கட்சியினர் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது.எனவே அதைத் தடுக்கும் வகையில் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோயிருந்தனர்.
இதே போன்ற மனுவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடமும் திமுக குழுவினர் கொடுத்தனர்.
மாநகராட்சி: கூட்டத்தை குறைக்க சட்ட மசோதா
இதற்கிடையே சென்னை மாநகராட்சிக் கூட்டத்தை மாதந்தோறும் நடத்துவதற்குப் பதில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வகைசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டசபையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று இதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சி ஆணையர், நிலைக் குழுக்களின் அதிகார வரம்புகளை ஆய்வு செய்ததில்,மாதந்தோறும் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மாதந்தோறும் மாநகராட்சிக் கூட்டத்தை நடத்துவதற்குப் பதில் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டத்தை நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு வராமல் இருக்கும் உறுப்பினர்களின் பதவியைப் பறிக்கவும் இந்த சட்ட மசோதா வகைசெய்யும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications