ரவியிடம் குறுக்கு விசாரணை: ஜெயேந்திரர் வரவில்லை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் இன்று அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்திடம் குறுக்கு விசாரணை நடக்கிறது. ஆனால் ஜெயேந்திரர்மற்றும் விஜயேந்திரர் இருவரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதையடுத்து அவர்களைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கவேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவர் ஆகியுள்ள ரவி சுப்பிரமணியம் கடந்த 7ம் தேதி காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில்நீதிபதி உத்தமராஜன் முன் சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து இன்று அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.
ஆனால் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகிய இருவரும் வரவில்லை. அவர்களது வழக்கறிஞர் தினகர் தாக்கல் செய்த ஒரு மனுவில்,இருவரும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் நேரில் வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார்.
இந்த மனுவை நீதிபதி உத்தமராஜன் பரிசீலித்தபோது அரசு வழக்கறிஞர் தியாகராஜன் கடும் எதிர்ப்பு தெவித்தார். அவர்கூறுகையில், இத்தோடு 3வது முறையாக நீதிமன்றத்துக்கு வராமல் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் புறக்கணித்துள்ளனர்.
முக்கியமான விசாரணை நடைபெறவுள்ள நிலையில் இருவரும் வராமல் இருப்பது சரியானதல்ல. அவர்களைக் கைது செய்துகொண்டு வர கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும். அப்படி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் 3 மணி நேரத்தில் அவர்களைக்கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியும் என்றார் அவர்.
அப்போது குறுக்கிட்ட தினகர், அப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமானால், 3 மணி நேரத்துக்குள் ஜெயேந்திரர், விஜயேந்திரர்கோர்ட்டில் ஆஜராவார்கள் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உத்தமராஜன், அடுத்த முறை விசாரணை நடக்கும்போது இருவரும் கண்டிப்பாகஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ரவி சுப்பிரமணியத்தின் வாக்குமூலம் தொடர்பான சில ஆவணங்களைக் கோரி ஜெயேந்திரர் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.
இதையடுத்து ரவி சுப்பிரமணியத்திடம் ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை தொடங்கினர். இன்று மாலைவரை குறுக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications