குளத்தில் கொதிக்கும் குமிழிகள்: பூமிக்குள் இருந்து வாயு கசிவு- பொதுமக்கள் பீதி
தூத்துக்குடி & திருவாரூர்:
![]() |
தூத்துக்குடி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் குளங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நீர்க் குமிழிகளால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது. இது குறித்து ஹைதராபாத் புவி இயற்பியல் விஞ்ஞானிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு நடத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளம் கிராமம் வறட்சியான பகுதியாகும். இங்குள்ள பல குளங்கள் கடந்தபல வருடங்களாக நிரம்பியதே கிடையாது. ஆனால் சமீபத்தில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழையால் இந்தக்கிராமத்திலுள்ள பல குளங்கள் நிரம்பின.
இந்நிலையில் இங்குள்ள ஒரு குளத்தில் திடீரென்று நீர்க்குமிழிகள் தோன்றியுள்ளன. முதலில் இதை அப்பகுதியினர்பொருட்படுத்தவில்லை. ஆனால் நேரம் செல்லச்செல்ல நீர்க்குமிழிகள் அதிக அளவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்படத்தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தாசில்தார் ராஜாராம், கயத்தாறு போலீஸார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.
இது குறித்து ஐதராபாத்திலுள்ள புவி இயற்பியல் ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து நீர்க்குமிழிகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளதால் இக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தெற்காசியாவில் சமீபத்தில் தொடர் நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமியையடுத்து பூமிக்கு அடியில் இருந்து வாயுக்கசிவுஏற்பட்டுள்ளதால் இந்த குமிழிகள் தோன்றுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வாயு கசிவு:
![]() |
தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலிலும் தேங்கிக் கிடந்த தண்ணீலிருந்து நீர்க்குமிழிகள் வரத் தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வடசங்கேத்தி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் தேங்கிய மழைத் தண்ணீலிருந்து நீர்க் குமிழிகள் வரத் தொடங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகாம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அதன் பின்னர் ஆட்சித் தலைவர் ஏகாம்பரம் கூறுகையில், வயல் வறண்டு கிடந்து அதில் தண்ணீர் தேங்கினால் இதுபோல காற்றுவெளியேறுவது வழக்கமான நிகழ்வுதான். அதனால்தான் நீர்க்குமிழிகள் தோன்றியுள்ளன. எனவே பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை என்றார்.
மேலும் இம் மாவடத்தில் திருத்துறைப்பூண்டியில் வயல்வெளியில் இருந்து வாயு வெளியானதால் அங்கும் பீதி பரவியது.திடீரென வயலில் இருந்து வெண் நிறத்தில் புகையாக இந்த வாயு வெளியேறி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications