ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: விமான, ரயில் போக்குவரத்து நிறுத்தம்
டோக்கியோ:
ஜப்பானிலும் இந்தோனேஷியாவிலும் மிக சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
ஜப்பானில் அந் நாட்டு நேரப்படி இன்று காலை 7.22 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1 என்றஅளவுக்கு இந்த பூகம்பம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ நகரம் பயங்கரமாகக் குலுங்கியது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்றிரவு மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட படாங்பகுதிக்கு தெற்கே தான் இந்த பூகம்பமும் நிலை கொண்டிருந்தது. ரிக்டர் கோளில் 6.8 என்ற அளவுக்கு பதிவான இப்பூகம்பத்தையடுத்து சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் பரவியதால் மக்கள் வீடுகளை விட்டு ஓடினர்.
ஜப்பானில் டோக்கியோவில் கடல் பகுதியில் நிலத்துக்கு அடியில் 52 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால்சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என அந் நாடு அறிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தில் இருந்து இபராகி அணு மின் நிலையம் தப்பிவிட்டது. ஆனால், நரிடா விமான நிலையம்மூடப்பட்டுவிட்டது. ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications