சோனியா மீது வழக்கு: சு. சுவாமி மனு தள்ளுபடி
டெல்லி:
தனது கல்வித் தகுதி குறித்து பொய்யான தகவல் தந்த சோனியா காந்தி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இந்தியாவின் கோயபல்ஸ் என்ற பெயர் வாங்கும் அளவுக்கு எதையாவது கூறிக் கொண்டிருக்கும் சுவாமி, சமீபகாலமாகசோனியா காந்தியை டார்கெட் செய்து வருகிறார்.
ஆங்கிலத்தில் வெறும் பட்டயப் படிப்பு (சர்டிபிகேட் கோர்ஸ்) மட்டுமே பெற்றுள்ள சோனியா காந்தி, தான் கேம்பிரிட்ஜ்பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் உயர் கல்வி பயின்றதாக பொய்யான தகவலை தேர்தல் கமிஷனிடம் தந்துள்ளதாக சுவாமி கூறிவந்தார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
சோனியா காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி தொகுதியில் போட்டியிட்டபோது, தன்னை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமாணவி என்றும், ஆங்கில உயர் கல்வி பெற்றவர் என்றும் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நான் விசாரித்தபோது அங்கு ஆண்டோனியோ மொய்னோ (சோனியா காந்தி)படிக்கவே இல்லை என்று தெரியவந்தது.
அவர் 1965ம் ஆண்டில் லெனோக்ஸ் குக்ஸ் ஸ்கூலில் ஆங்கிலத்தில் பட்டயப் படிப்பு மட்டுமே படித்துள்ளார்.
வேட்பு மனுவில் பொய்யான தகவலைத் தந்து தன்னை மிகவும் படித்த பெண் போல காட்டிக் கொண்டு ஓட்டு வாங்கிவாக்காளர்களை ஏமாற்றிய சோனியா மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு சுவாமி கோரியிருந்தார்.
சுவாமியின் மனுவை விசாரித்து அவரது விரிவான வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி லஹோத்தி, நீதிபதி மாத்தூர் ஆகியோர்இன்று அம் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
சோனியா காந்தி தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில், தன்னை லெனோக்ஸ் குக் ஸ்கூல் மாணவி என்று தான்குறிப்பிட்டுள்ளார். கேம்ப்ரிட்ஜ் மாணவி என்றெல்லாம் குறிப்பிடவே இல்லை. இதனால் சுவாமியின் மனு தள்ளுபடிசெய்யப்படுகிறது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications