சட்டசபையில் திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு
சென்னை:
சட்டசபை குழுக்களின் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காததைக் கண்டித்துசட்டசபையிலிருந்து திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இன்று வெளிநடப்புச் செய்தனர்.
இந்தத் தீர்மானத்துக்கு திமுக துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கடும் எதிர்ப்புதெரிவித்தனர்.
துரைமுருகன் பேசுகையில், சட்டசபைக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதாக இருந்தால் முன் கூட்டியே எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்வது மரபாக இருந்து வருகிறது.
ஆனால் முன் கூட்டியே சொல்லாமல், கலந்து ஆலோசிக்காமல் திடீரென பதவி நீட்டிப்பு தீர்மானத்தை தாக்கல் செய்வதுகண்டனத்துக்குரியது என்றார். இதே கருத்தை எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும் தெரிவித்தார்.
ஆனால் சபாநாயகர் காளித்து, எதிர்க்கட்சியினரை கலந்து ஆலோசித்துத்தான் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றுவிதியில் கூறப்படவில்லை. அதேபோல, அலுவல் ஆய்வுக் குழுவிலும் இந்தத் தீர்மானத்தை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.இக் கருத்தை பொன்னையனும் ஆமோதித்து பேசினார்.
தங்களது கருத்து நிராகக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த துரைமுருகனும், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும், இதைக் கண்டித்து வெளிநடப்புச்செய்தவதாக கூறி வெளியேறினர். அவரைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வெளிநடப்புச் செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளிநடப்புச் செய்தன. ஆனால், பாஜக வெளிநடப்பு செய்யவில்லை.
வெளிநடப்புக்குப் பின்னர் அரசின் தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications