உறுதிக்கு பேர் போன எம்.பி.சுப்பிரமணியம்
சென்னை:
1952ம் ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார் எம்.பி.எஸ். என்று அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட எம்.பி.சுப்ரமணியம்.
பின்னர் 1957ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் ஆத்தூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தமிழகம்முழுவதும் 15 திமுகவினரே வெற்றி பெற்றனர். அவர்களில் எம்.பி.எஸ்ஸும் ஒருவர்.
திமுகவில் இருந்தபோதும், மற்ற தலைவர்களை விட, ஈ.வி.கே.எஸ். சம்பத்திற்குத்தான் எம்.பி.எஸ். மிகவும் நெருக்கமானவராக இருந்துவந்தார். ஈ.வி.கே.எஸ். சம்பத், திமுகவிலிருந்து விலகியபோது அவருடன் சேர்ந்து பழ. நெடுமாறன், கண்ணதாசன் ஆகியோரும்திமுகவிலிருந்து விலகினர். அவர்களில் எம்.பி.எஸ்ஸும் ஒருவர்.
பின்னர் சம்பத், தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினார். ஆனால் இந்தக் கட்சி பின்னர் காங்கிரஸுடன் இணைந்தது.
காங்கிரஸ் கட்சியிலும் எம்.பி.எஸ். முக்கியமான தலைவராக விளங்கினார். 1980ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராகநியமிக்கப்பட்டார். இந்த சமயத்தில்தான் புதிய பரபரப்பை அவர் ஏற்படுத்தினார். அதாவது, அப்போது நடந்த சட்டசபைத்தேர்தலின்போது,
திமுகவுக்கு இணையாக காங்கிரஸுக்கும் சீட் கொடுக்கப்படவேண்டும் என்று கட்சி மேலிடத்தை வலியுறுத்தி அதற்கான பட்டியலையும்கொடுத்து திமுகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார் எம்.பி.எஸ்.
ஆனால் அப்போது நடந்த தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்து சரித்திரம் படைத்தது. இதனால்எம்.பி.எஸ்.ஸின் "சம ஒதுக்கீடு பார்முலா" தோல்வி அடைந்தது.
1984ல் எம்.பி.எஸ். சட்டமேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார். 1989ம் ஆண்டுயாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவில் போய் சேர்ந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பினார்.
பேச்சிலும், எழுத்திலும் மிகவும் உறுதியாக இருப்பவர் என்று பாராட்டப்பட்டவர். மனதில் பட்டதை பட்டென்று சொல்லும் வழக்கம்உடையவர்.
சமீபத்தில் கூட மத்தியில் உள்ளது போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி வர வேண்டும், திமுக தலைமையிலான ஆட்சியில்காங்கிரஸுக்கும் பங்கு தர வேண்டும் என்ற மத்திய அமைச்சர் இளங்கோவனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் எம்.பி.எஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications