திமுக ஆட்சியில் ரூ. 20 கோடி நில ஆக்கிரமிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்றம் மூலம்மீட்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் பேசிய பாமகஉறுப்பினர் உலக ரட்சகன், வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளை வாங்கிய பலர் கடன் கட்டத் தவறியதால்தற்கொலை செய்துள்ளதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், யாரும் தற்கொலை செய்ததாக எந்த தகவலும் இல்லை. கடந்த திமுகஆட்சியில் பல்வேறு இடங்களில் நிலங்களை வாங்கி வீடுகள் கட்டினர். அப்படிக் கட்டப்பட்ட பல வீடுகள் விற்காமல் இருக்கிறது.

சுமார் ரூ. 918 கோடி மதிப்புள்ள வீடுகள் விற்கப்படாமல் இருந்தன. முதலமைச்சரின் நடவடிக்கை காரணமாக அந்த வீடுகள்விற்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதன் பிறகு பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, 1991-96ம் ஆண்டுகளில் நடந்த அதிமுக ஆட்சியில் தேவையில்லாதஇடங்களில் வீடுகளை கட்டி இன்று வரை விற்கப்படாமல் இருக்கிறது என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக ஆட்சியில் தான் தேவையற்ற இடங்களில் வீடுகளைகட்டினார்கள்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 73 வீடுகளை கட்டி இன்று வரை விற்கப்படாமல் இருக்கிறது என்றார்.

அடுத்து பேசிய உலக ரட்சகன், பெசன்ட் நகர் இந்திரா நகரில் ரூ.20 கோடி மதிப்புள்ள 52 கிரவுண்டு காலியிடத்தை ஐபிஎஸ்,ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு குறைந்த விலையில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன், புரட்சித் தலைவியின் ஆட்சியில் எந்த இடமும் யாருக்கும் குறைந்த விலையில்கொடுக்கப்படவில்லை. கைட்லைன் மதிப்பு மற்றும் மார்க்கெட் மதிப்பு இதில் எது அதிகமோ அந்த விலைக்குத் தான் நிலங்கள்விற்கப்படுகிறது.

உறுப்பினர் சொன்ன ரூ.20 கோடி பெசன்ட் நகர் காலியிடம் திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் ஒருவரால்ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அந்த இடத்தை மீட்டுள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+