ஜெ. நிச்சயம் ஒருநாள் பிரதமராவார்: காளிமுத்து ஜோதிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா ஒருநாள் நிச்சயம் இந்தியப் பிரதமராவார் என சபாநாயகர் காளிமுத்து கூறினார்.

35 நாட்கள் நடந்த தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று முடிவடைந்தது. இதையடுத்து அவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அவையின் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி ஆளுநர் பர்னலாவின் உரையுடன் தொடங்கியது.

குறுகிய காலமே நடந்த கூட்டத் தொடருக்குப் பின் பிப்ரவரி 7ம் தேதி அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 2ம் தேதிமீண்டும் அவை கூடியது. அன்றைய தினமே வரியில்லா பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று வரை (ஏப்ரல் 13) அவையின் கூட்டம் நடந்தது. மொத்தம் 35 நாட்கள் அவை நடந்துள்ளது.

இந்த 35 நாட்களில் பெரும்பாலான நாட்கள் எதிர்க் கட்சிகள் வெளியேற்றப்பட்டனர் அல்லது அவர்களாகவே வெளிநடப்புசெய்தனர். இதனால் மிகுந்த பரபரப்பாகவே கூட்டத் தொடர் நடந்தது.

அவையின் கூட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து மிகுந்த உணர்ச்சிவசத்துடன் பேசிய சபாநாயகர் காளிமுத்து கூறியதாவது:

திருக்குறளை தேசிய இலக்கியமாக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து முதல்வர் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்ததற்காகஅவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அவை விதி 110ன் கீழ் பல்வேறுஅறிவிப்புகளை இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் முதல்வர் வெளியிட்டார். அதற்காகவும் நன்றி.

நாளையில்லாவிட்டாலும் நிச்சயமாக ஒருநாள் முதல்வர் அவர்கள் இந்த நாட்டின் பிரதமராவார் என்றார் காளிமுத்துஉணர்ச்சிவசமாக.

இதை அதிமுக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் மேஜையை தட்டோ தட்டு என்று வரவேற்றனர்.

கடைசி நாளிலும் வெளிநடப்பு:

முன்னதாக சட்டமன்றக் கூட்டத்தின் கடைசி நாளான இன்றும் எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று சென்னை மாநகராட்சி கூட்டம் தொடர்பான மசோதாகொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் கே.பி.அன்பழகன்,

இனிமுதல் 1 மாதத்திற்குப் பதிலாக 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சென்னை மாநகராட்சி கூட்டம் நடத்தப்படும் என்றுஅறிவித்தார். மாநகராட்சிக் கூட்டத்தில் அடிக்கடி உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டு வருவதால் இந்த முடிவை அரசுஎடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு பாஜக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

அப்போது பேசிய திமுக எம்எல்ஏ ஸ்டாலின், சென்னை மாநகராட்சியில் நாங்கள் பதவிக்கு வந்த பிறகு தான் நகரில் வாந்தி, பேதி,காலரா பரவியதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக நிர்வாகத்தில் தான் மாநகராட்சி சிறப்பாக நடப்பதாகவும்சொன்னார். நாங்கள் பொறுப்பில் இருந்தபோது செய்திட்ட சாதனைகளை பட்டியலிட நான் தயார். சபாநாயகர் அனுமதி தரட்டும்.நான் விவாதிக்கிறேன். நீங்கள் விவாதம் நடத்தத் தயாரா என்று கேட்டார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், விவாதிக்கத் தயார் என பதிலளித்தார்.

அப்போது இடைமறித்த சபாநாயகர் காளிமுத்து, இன்று சட்டசபையின் கடைசி நாள். விவாதத்தை இன்னொரு நாள் எடுத்துக்கொள்வோம் என்றார்.

இதையடுத்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தை 1 மாதத்திற்குப் பதிலாக 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே கூட்டுவதற்குஎதிர்ப்பு தெரிவித்து பிற உறுப்பினர்களும் பேசினர். இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினர். இதைஅரசு ஏற்க மறுத்தது.

அரசின் இந்த முடிவு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதாக உள்ளது என்று கூறி, திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.

பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அக்கட்சி வெளிநடப்பு செய்யவில்லை. இதன் பிறகு இந்த மசோதாநிறைவேற்றப்பட்டது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசிக் கூட்டம் என்பதால் திமுக தவிர மற்ற கட்சி உறுப்பினர்கள் சிறிது நேரத்தில் மீண்டும்அவைக்கு திரும்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+