சிங்கப்பூர்: தமிழருக்கு மரண தண்டனை- காக்க முயலும் மகன்கள்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய, 14 வயதான அவரது இரு மகன்கள் போராடிவருகின்றனர்.

சிங்கப்பூரில் வசித்து வருபவர் சண்முகம் முருகேஷ் (வயது 38). சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா கடத்திய இவர் கைதுசெய்யப்பட்டார்.

போதைப் பொருள் சட்டம் சிங்கப்பூரில் தான் மிக கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டயாராவது 500 கிராமுக்கு அதிகமாக கஞ்சா வைத்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் கடந்த 1991ம் ஆண்டு முதல் இதுவரை 400 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேருக்கு மட்டுமேமரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முருகேஷ் மீது 1 கிலோ கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு மரண தண்டனைவிதிக்கப்படுவது உறுதியாகி விட்டது.

முருகேஷுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரட்டைக் குழந்தைகளான இவர்கள் இருவருக்கும் 14 வயது ஆகிறது. இவர்கள் இருவரும்தங்களது தந்தையை காப்பாற்ற சட்டப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்களது தந்தை கைதானது முதல், வேலை இல்லாத பாட்டியின் ஆதரவில்வாழ்ந்து வருகிறோம். எங்கள் தாயார் எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

எங்களது தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் நாங்கள் இருவரும் அனாதைகளாகி விடுவோம். எனவே அவருக்குமரண தண்டனை விதிக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை நோட்டீஸாக அச்சடித்து பொது மக்களிடம் வினியோகித்தும் ஆதரவு தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+