கிணற்றில் விஷ வாயு தாக்கி 4 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே கிணற்றில் இறங்கிய 4 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள பரதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது விவசாய கிணற்றில் உள்ள பம்ப்செட் பழுதடைந்தது.இதை பழுதுபார்ப்பதற்காக கார்த்திகேயன், வைத்தியநாதன் மகன் முருகவேல், குருநாதன், செல்வம் ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கினர்.

அப்போது கிணற்றிலிருந்து வெளியான விஷ வாயு தாக்கியதில் 4 பேரும் மயக்கமடைந்தனர். பின்னர் நீரில் மூழ்கினர்.

உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து நான்கு பேரின் உடல்களையும்மீட்டனர்.

அந்தக் கிணற்றில் இருந்து மீத்தேன் வாயு அதிக அளவில் வெளியேறி வருவதால், அதன் அருகே யாரும் செல்ல போலீசார் தடைவிதித்துள்ளனர். வாயு அதிகமாக வெளியேறுவதால் நீர் கொப்பளித்துக் கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+