வேட்டி கட்டாதது பெரிய பிரச்சினையா? அன்புமணி பாய்ச்சல்
சென்னை:
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது, நான் வேட்டி கட்டாதது தான் பெரிய பிரச்சினையாகி விட்டதா என்றுமுதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி.
சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், அன்புமணி எப்போதும் கோட் சூட்டுடன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு திரிவதாக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதுபற்றிப் பேச வேண்டிய சட்டசபையில், தேவையே இல்லாத ஒரு விஷயம் குறித்து, நான் வேட்டி கட்டாதது குறித்துபேசியுள்ளார் முதல்வர். நான் வேட்டி கட்டினால் என்ன அல்லது வேறு உடை அணிந்தால் அவருக்கு என்ன?
இது பற்றியெல்லாமா சட்டசபையில் பேசுவார்கள்? வறுமை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற முக்கியப்பிரச்சினைகளைப் பற்றி சட்டசபையில் பேசுவதை விட்டு வேட்டி கட்டினால்தான் தமிழன் என்று தேவையில்லாமல் விவாதம்நடத்தியிருக்கிறார்கள்.
வேட்டி கட்டியிருக்கிற அனைவருமே தமிழைப் பாதுகாக்கிறார்கள் என்றோ, கோட் சூட் போட்ட அனைவருமே தமிழைஅழிக்கிறார்கள் என்றோ கூற முடியாது.
பாமக தலைவர் ஜி.கே.மணி கேட்ட கேள்விக்கு முறையாக பதில் சொல்லமுடியாத ஆத்திரத்தில்தான் எனது உடை குறித்துவிமர்சனம் செய்துள்ளார் முதல்வர்.
தான்சானியா நாட்டுக்கு நான் சென்றபோது அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நான் வேட்டி, சட்டை தான் போட்டுச்சென்றிருந்தேன். எனது கலாச்சார உடையில் நான் சென்றதை அங்குள்ள அனைவருமே பாராட்டினார்கள் என்றார் அன்புமணி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications