ஏவுகணை சோதனை: இந்தியா முதலில் நிறுத்த வேண்டும்-முஷாரப்
டெல்லி:
ஏவுகணை சோதனைகளை இந்தியா முதலில் நிறுத்தினால் பாகிஸ்தானும் உடனடியாக நிறுத்த தயார் என்று முஷாரப் கூறினார்.
3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் முஷாரப் நேற்று டெல்லியில் இந்தியா பாகிஸ்தான் மோதியகிரிக்கெட் போட்டியை பார்த்தார். இதன் பிறகு பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச்சு எழுந்த போது எல்லைகளை மாற்றியமைப்பது நடக்காத காரியம் என பிரதமர் மன்மோகன் சிங்திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மும்பை, கராச்சியில் துணை தூதரகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா இடையேயும், ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா இடையேயும் எண்ணைகுழாய் அமைப்பது அவசியம் என பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது. சியாச்சின் மற்றும் சர்கிரீக் பிரச்சினை குறித்தபேச்சுவார்த்தையை மேலும் தீவிரப்படுத்து இருவரும் ஒப்புக்கொண்டனர்.
சுமார் இரண்டரை மணிநேரம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
யார் தீவிரவாதி?
தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முஷாரப் பிலிப்பைன்ஸ் புறப்படும் முன் டெல்லியில் பத்திரிகைஆசிரியர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் யார் தீவிரவாதி என்பதில் தான் குழப்பம் இருக்கிறது.
ஒருவரை தீவிரவாதி என்று நாம் கூறினால், வேறு சிலர் அவரை விடுதலைப் போராட்ட வீரர் என்று கூறுகிறார்கள்.
ஏவுகணை சோதனைகளை முதலில் இந்தியா நிறுத்திக் கொண்டால், பாகிஸ்தானும் உடனடியாக நிறுத்தத் தயார். காஷ்மீர்பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்படாவிட்டால், மாறுபட்ட தலைமையில் மாறுபட்ட சூழ்நிலையில் அது வேறு விதமாகவெடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளுக்கு ராணுவ ரீதியான நடவடிக்கை இனி தீர்வு ஆகாது. இந்தியாவுக்கும்ஈரானுக்கும் இடையே எண்ணைக் குழாய் அமைப்பது தேச நலனுக்கு ஏற்றது. எனவே அந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications