மதானியை விடுவிக்க உயர்நீதிமன்றத்தில் மனைவி மனு
புதுடெல்லி:
கோவை தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள்ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி சூஃபியா மதானி, உச்சநீதிமன்றத்தில்ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் மதானியின் மனைவி சூஃபியா மதானி, உச்சநீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,எனது கணவர் மதானி கடந்த 2000மாவது ஆண்டு மே 15ம் தேதி முதல் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முறையான வகையில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவருக்குக் காவல் நீட்டிப்பு தராமல் சிறையில் அடைத்துள்ளனர். எனவேஅவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. சூஃபியா மதானிக்காக பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான ராம் ஜேட்மலானி வாதாடவுள்ளார்.












Click it and Unblock the Notifications