சென்னை மாநகராட்சி தேர்தல்: அதிமுக வன்முறை-சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி வார்டுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி உட்பட6 எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் ஊராட்சிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியின் 110வது வார்டுக்கானவாக்குப்பதிவு மையம் அண்ணா சாலை மாவட்ட மத்திய நூலகக்கட்டிடம் உட்பட 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது.

காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 7 மணிக்கு முன்னதாகவேஏராளமானோர் ஓட்டுப்போட வரிசையில் காத்திருந்தனர்.

இவர்களில் பலர் கள்ள ஓட்டுப்போட வந்திருப்பதாக திமுகவினரும், அதிமுகவினரும் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாகஅண்ணாசாலை மத்திய நூலகக்கட்டிடத்திலுள்ள வாக்குச்சாவடியில் திமுக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதலில் திமுக பூத் ஏஜெண்ட் சுந்தரேசனுக்கு பலத்த அடி விழுந்தது. அவரை சிலர் வாக்குச் சாவடியில் இருந்து வெளியேஇழுத்துவந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோல கிரீம்ஸ் ரோடு ஆசாத் மேல்நிலைப்பள்ளி பூத்திலும் திமுக, அதிமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீஸார்தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.

6 திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது:

சிறிது நேரத்தில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் அங்கு வந்தார். அப்போது அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக கூறிகிரீம்ஸ் ரோட்டில் மறியல் அவர் செய்தார். அவருடன் திமுக, காங்கிரஸ் தொண்டர்களும் மறியல் செய்தனர். உடனடியாக அங்குவிரைந்து வந்த போலீஸார் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து அண்னா சாலையில் மறியல் செய்யச் சென்ற அன்பழகன், காங்கிரஸ் கவுன்சிலர் நாராயணன் உட்பட 100பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிறிது நேரத்தில் கோபாலபுரத்தில் உள்ள வாக்குச் சாவடிகளை பார்வையிடுவதற்காக மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, புரசைரங்கநாதன்,பரிதி இளம்வழுதி, உசேன் ஆகியோர்அங்கு வந்தனர். அப்போது அதிமுக தொண்டர்கள் கள்ள ஓட்டுப் போடுவதாகஅவர்களிடம் திமுகவினர் புகார் கூறினர்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் , ஆற்காடு வீராசாமி, ரங்கநாதன், பரிதி இளம்வழுதி, உசேன் ஆகியோர் கோபாலபுரத்தில்தொண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட னர். கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 5 எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்தனர்.

மேலும் கே.கே.நகர் பகுதி வாக்குச் சாவடியில் ஒரு கும்பல் பயங்கர வன்முறையில் ஈடுபட்டது. இங்கு செய்தி சேகரிக்க சென்ற சன்டிவி கேமராமேன் உட்பட பல பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்.

எம்.ஜி.ஆர்.நகர் நெசப்பாக்கம் ரோட்டிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 19 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.இதனால் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

திடீரென அப்பகுதியில் சோடா பாட்டில்களும், கற்களும் வீசப்பட்டன. அப்பகுதியில் இருந்த திமுக காரியாலயத்தின் மீதும்கற்கள் வீசப்பட்டன. இதனால் திமுகவினரும், வாக்காளர்களும் சிதறி ஓடினார்கள்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதில் 4 கார்களின் கண்ணாடிகள் நொறுங்கின.

சிறிது நேரம் கழித்து அங்கு பூந்தமல்லி நகரசபை தலைவர் ஞானம் தனது காரில் வந்தார். அந்தக் காரின் மீது ஒரு கும்பல்சரமாரியாக கல் வீசியது. இதில் கார் சேதமடைந்தது. கல்வீச்சில் நகரசபை தலைவர் ஞானத்திற்கு காயம் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+