ஜெர்மனியின் ரட்சிங்கர் புதிய போப்!
வாடிகன்:
![]() |
புதிய போப் ஆண்டவராக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 78 வயதான ஜோசப் ரட்சிங்கர் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்265வதுபோப் ஆவார்.
போப் இரண்டாம் ஜான் பால் கடந்த 2ம் தேதி மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவரைதேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 18ம் தேதி தொடங்கியது.வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் 115 கர்தினால்களும் ரகசியஅறையில் ஓட்டுப் போட்டனர்.
முதல் சுற்றில் யாருக்கும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் 2வது நாளாக நேற்று காலையில் இரண்டுமுறை ஓட்டுப் பதிவு நடைபெற்றது. இதன் பின்னர் மாலை 3.30 மணியளவில் தேவாலய புகைக்கூண்டில் இருந்து புகைகிளம்பியது.
முதலில் அது வெண்புகை போல தோன்றியதால் தேவாலயத்தின் முன்பு கூடியிருந்தவர்கள் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதாக கருதினர். ஆனால் பீட்டர்ஸ் தேவாலயத்தின் மணி ஒலிக்காததால் மக்கள் குழப்பம் அடைந்தனர். ஆனால் முதலில்தோன்றிய புகை கறுப்புப் புகை என்று பின்னர் தெரியவந்தது.
மீண்டும் மாலை 4 மணிக்கு கர்தினால் கூடினார்கள். இரவு ஓட்டுப் பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவானவாக்குகள் எண்ணப்பட்டன.
மணி முழங்கியது:
சிறிது நேரத்தில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவிக்கும் வகையில் சிஸ்டைன் தேவாலய புகைக்கூண்டிலிருந்துவெண்புகை கிளம்பியது. பீட்டர்ஸ் தேவாலயத்தின் மணியும் முழங்கியது.
இதைப் பார்த்த அங்கு கூடியிருந்த லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்துமகிழ்ச்சியடைந்தனர். புதிய போப் யார் என்பதை அறிய மக்கள் மிகவும் ஆவலாக இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து புதிய போப் ஆண்டவர் ஜோசப் ரட்சிங்கர் மாடத்தில் தோன்றி அனைவருக்கும் ஆசி வழங்கினார்.
265வது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோசப் ரட்சிங்கர், இனிமுதல் பெனடிக்ட்-16 என்ற பெயரில் அழைக்கப்படுவார்.78 வயதான இவர், மறைந்த போப் ஆண்டவரின் செயலாளராக பணியாற்றினார்.
கடந்த 1000 ஆண்டுகளில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.
இன்று வாடிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதில் புதிய போப் ஆண்டவர் ஜோசப் ரட்சிங்கர் கலந்துகொள்கிறார். பதவி ஏற்பு நிகழ்ச்சி 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications