குஜராத்தில் லாலு கார் மீது கல்வீச்சு
சமால்யா:
குஜராத் மாநிலத்தில் ரயில் விபத்தை பார்வையிடச் சென்ற ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் கார் மீது சரமாரியாககற்கள் வீசப்பட்டன. அவரது காருக்கு ஒரு கும்பல் தீவைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் வதோரா மாவட்டம் சமால்யா அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில்மோதியதில் 100 பேர் பலியானார்கள்.
அங்கிருந்து லாலு, காரில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு கும்பல் லாலுவின் காரைநோக்கி சரமாரியாக கற்களை வீசியது. மேலும் அவரது காருக்கு தீவைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் லாலுவுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து லாலு கூறுகையில், இது குஜராத் முதல்வர் மோடியின்திட்டமிட்ட வேலை தான். என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற திட்டமிட்டுத் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
என்னுடைய கார்மீது கற்களை வீசியது பஜ்ரங் தள் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் தான். கற்களை வீசியதோடு மட்டுமல்லாமல்காருக்கு தீவைக்கவும் அவர்கள் முயன்றார்கள்.
குஜராத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே எடுத்துக்காட்டாகும். எனவே குஜராத்அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications