அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நாளைதொடங்குகிறது.
நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை விநியோகிக்கப்பட்டுபெறப்பட்டன. மொத்தம் 1,67,877 பேர் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த ஆண்டை விட 18,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நுழைவுத் தேர்வு நாளையும், நாளைமறுநாளும் நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் 41 இடங்களில் மொத்தம் 295 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.