2 ரூபாய்க்கு கொலை; தொழிலாளிக்கு ஆயுள் - 24 நாட்களில் தீர்ப்பு!
சென்னை:
2 ரூபாய் தர மறுத்ததால் தனது நண்பரை மது பாட்டிலால் குத்திக் கொன்ற தொழிலாளிக்கு சென்னை 3வது விரைவு நீதிமன்றம்ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 24 நாட்களில் இந்த வழக்கை விசாரித்து சென்னை விரைவு நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை புதுப்பேட்டை எல்.ஜி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரும், வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த சத்யசீலன்என்பவரும் சேர்ந்து பேப்பர் பொறுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, கையில் இருந்த மது பாட்டிலை உடைத்து சத்தியசீலனைக் குத்தினார். கழுத்தில் படுகாயமடைந்தசத்தியசீலன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்த நாள்இறந்தார்.
கைது செய்யப்பட்ட மூர்த்தி மீது சென்னை 3வது விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையை 24 நாட்களில்முடித்த நீதிபதி பழனிச்சாமி, மூர்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1000அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.
சென்னை விரைவு நீதிமன்றம் ஒன்றில் இவ்வளவு துரிதமாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. மேலும், தமிழகத்தில்மேலும் சில விரைவு நீதிமன்றங்களிலும் இதுபோல துரிதமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications