62 நிமிடங்களில் 1330 குறள்கள் ..!
கோவை:
திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் 62 நிமிடங்களில் 1330 குறள்களையும் பிழையின்றி ஒப்புவித்து அனைவரையும்ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
"துப்பார்க்குத் துப்பாய .. என்று தொடங்கும் குறளை சரியாக ஒப்புவிப்பதற்குள் நம்மில் பலர் தடுமாறிப் போய் விடுவோம்.நிலைமை இப்படி இருக்கையில், திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் தடுமாறாமல், பிழையின்றி 62 நிமிடங்களில் கூறிஅசத்துகிறார் திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளர் ரங்கராஜ்.
திருக்குறளில் உள்ள கருத்துக்கள் வெகுவாக இவரைக் கவர்ந்ததால், அத்தனை குறள்களையும் மனப்பாடமாக படிக்கஆரம்பித்தார். இப்போது அத்தனை குறள்களும் இவருக்கு அத்துப்படி.
அத்துடன் நிற்காமல் தனது மகன்கள் விவேக்ராஜ் (12வது படிக்கிறார்), கோகுல்ராஜ் (8வது படிக்கிறார்) ஆகியோருக்கும்திருக்குறளை கற்றுக் கொடுத்துள்ளார். அவர்களும் இப்போது 350 குறள்கள் வரை கூறுகிறார்கள்.
அத்தனை குறள்களையும் அப்படியே கடகடவென கூறி அசத்துகிறார் ரங்கராஜ். அத்துடன், ஏதாவது ஒரு குறளைக் கூறி அதுஎத்தனையாவது குறள், எந்த அத்தியாயத்தின் கீழ் வருகிறது என்பதையும் சரியாக கூறுகிறார்.
இப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட குறள்களையும் மனப்பாடம் செய்யத் தொடங்கியுள்ளார். அறத்துப்பாலில் வரும்380 குறள்களையும் மனப்பாடம் செய்து முடித்துள்ளாராம். மற்ற குறள்களையும் விரைவில் மனப்பாடம் செய்து விடுவேன் என்றுகூறுகிறார் சாதனை மனிதர் ரங்கராஜ்.
ரங்கராஜின் குறள் ஆர்வத்தைப் பார்த்து வியந்த ஈரோடு தமிழ்ச் சங்கம், அவருக்கு "நற்குறள் நாயகன்" என்ற விருது அளித்துப்பாராட்டியுள்ளதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications