கீரிப்பட்டி: ஊராட்சித் தலைவர் "வழக்கம் போல" ராஜினாமா!
மதுரை:
கீரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இன்று பதவியேற்ற அழகுமலை, அடுத்த நிமிடமே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தலித் பஞ்சாயத்துக்களான மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக தேர்தல்நடத்த முடியாமல் உள்ளது. அப்படியே தேர்தல் நடந்தாலும் பதவியேற்ற உடனேயே அவர்கள் ராஜினாமா செய்து விடும் நிலைநீடித்து வருகிறது.
வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலனுக்காக உழைக்கப் போவதாக பேட்டி அளித்தார். ஆனாலும்பதவியேற்ற உடன் வழக்கம் போல அழகுமலையும் தனது பதவியை ராஜினாமா செய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதேபோல, இன்று தனது பதவியை, பதவியேற்ற உடனேயே ராஜினாமா செய்து விட்டார் அழகுமலை.
கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார் அழகுமலை. அதன் பின்னர் கையோடுகொண்டு வந்திருந்த ராஜினாமா கடிதத்தை ஊராட்சி மன்ற அலுவலரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினார்.
பதவியேற்ற உடனேயே அழகுமலை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால் கீரிப்பட்டி ஊராட்சி அலுலகத்தில் பரபரப்புஏற்பட்டது.
அழகுமலையின் ராஜினாமா மூலம், கீரிப்பட்டி பஞ்சாயத்துக்கு மீண்டும் பிரதிநிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications