ப.சிதம்பரம் மீது ஜெ. மீண்டும் கடும் தாக்கு
சென்னை:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதற்காக அதிமுக அரசு மீது தேவையில்லாத புகார்களைக்கூறி வருகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முடக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றம் சாட்டிய மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக, ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து ஜெயலலிதாமீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் தனது சொந்த மாவட்டத்திலேயே,விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த ஒரு நல்ல செயலையும் செய்யாமல்,
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை முடக்கி வைத்த ப.சிதம்பரம், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான்நல்லது நடக்கும் என்று பேசி வருகிறார்.
சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஏதோ மத்திய அரசு தான் நிதியுதவி வழங்குவதுபோல மாயையை உருவாக்க முயன்று வருகிறார் ப.சிதம்பரம்.
இந்தத் திட்டத்தில் தொழில்நுட்ப மதிப்பீடு முடிவுறும் தறுவாயில் உள்ளது. இதுகுறித்து பலமுறை தெளிவுபடுத்தியும் அதைப்புரிந்து காள்ளாமல் தமிழக அரசு மீது ப.சிதம்பரம் குற்றம் சாட்ட முயலுவது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை.
மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் வருவதற்கு முன்பே கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கி விட்டது. நிலைமை இப்படிஇருக்க ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதும், புழுதி வாரி தூற்றுவது ஏன்?
சிவகங்கை கூட்டுறவு வங்கி முடக்கத்திற்கு திமுக ஆட்சியின் மோசடியான வேலைகள் தான் காரணம் என்று நான் விரிவாகவிளக்கிய பின்னர் அந்தப் பிரச்சினையிலிருந்து ஓடி ஒளிய இப்போது முயலுகிறார் ப.சிதம்பரம்.
வங்கி முறைப்படுத்துதல் சட்டம் 11(1) விதியின் கீழ் விதி விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தால் எந்தப் பிரச்சினையும்ஏற்பட்டிருக்காது. தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களிடமே மனித நேயத்துடன் நடந்து கொள்ளாத ப.சிதம்பரம், எம்.பியாகவும்,அமைச்சராகவும் இருப்பதில் என்ன பயன்?
அவரது துரோகச் செயலை நான் அம்பலப்படுத்தியதால், ரிசர்வ் வங்கி மீது பழி போட்டு ஓடி ஒளிய நினைக்கிறார். அவரது இந்தசெயல் சிவகங்கை தொகுதி மக்களிடையே வெற்றி பெறாது.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களால் தமிழகத்திற்கு உருப்படியாக எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
தமிழக நிதி நிலைமை சீரடைந்ததற்கும், தொழில் வளர்ச்சி பெருகியதற்கும், தமிழக அரசின் விடாமுயற்சியும், தீவிரசெயல்பாடுகளுமே காரணம். ஆனால் மத்திய அரசு என்ன செய்தது?
தமிழகத்திற்கு வர வேண்டி வரி வருவாயைக் குறைத்து விட்டது. பல்வேறு முறை கோரிக்கைகள் விடுத்தும் பிற மாநிலங்களுக்குஒதுக்கப்பட்ட பல்வேறு நிதி ஒதுக்கீடுகள்,மானியங்கள் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இந்த நிலையில், கடல்நீரைக் குடிநீராக்கும்திட்டத்திற்கு தானே காரணம் என்பது போல ப.சிதம்பரம் பேசுவது ஏன்?
கடந்த காலங்களில் பிரமரைச் சந்தித்தபோதெல்லாம் தமிழகத் திட்டங்கள் குறித்து விவாதித்தேன். சுனாமி நிவாரணப் பணிகள்குறித்தும் அவருடனும், மத்திய அமைச்சர் சரத்பவாருடனும் விவாதித்தேன். சுனாமி தமிழகத்தைத் தாக்கியபோது ப.சிதம்பரம்காணாமல் போனது ஏன்?
சுனாமி நிவாரணத்திற்காக எதையும் செய்யாமல், இப்போது மீனவர்களுக்கு வழங்கும் நிவாரணத்தையும் தடுக்க முயலுகிறார்சிதம்பரம். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் எத்தனை முறை என்னைசந்தித்தார்கள்?
தமிழக அரசுக்கு எதிராக பேசி பொய் வலை பின்னி வரும் ப.சிதம்பரம் சென்னைக்கு வரும்போது ஒரு முறை கூட என்னைசந்திக்காதது துரதிர்ஷ்டவசமானது. அப்படிப்பட்ட சிதம்பரத்தின் போக்கு எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை.
ப.சிதம்பரம் தனக்குத் தானே ஆத்ம பரிசோதனை செய்து கொண்டால் தமிழகத்திற்கு தான் எதையும் செய்யவில்லை என்பதுபுரியும். மக்கள் அபிலாஷைகளை நிறைவு செய்யாமல் துரோகம் செய்ததுதான் அவரது ஒரே சாதனை என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications