25,000 நர்சரிப் பள்ளிகளை மூட அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெறாத 25,000 நர்சரிப் பள்ளிகளையும், 100% மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் மூட தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்பட்டு வரும் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை மூடுமாறுசில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இந்தப் பள்ளிகள் மூடப்படவில்லை. தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்பட்டு வரும் 25,000 நர்சரிப் பள்ளிகளையும், 760 மெட்ரிகுலேஷன்பள்ளிகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனால் நர்சரிப் பள்ளிகளின் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திடீரென இத்தனை பள்ளிகளை மூடி விட்டால் தங்களது குழந்தைகளை எங்கு போய் சேர்ப்பது?

அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் தங்களது இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிப்பார்களே என்ற பீதி அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகளை மேம்படுத்தவும், தரமான கல்வியை போதிக்கவும் தங்களுக்கு குறைந்தது 5 ஆண்டு கால அவகாசமாவது தேவைஎன்று தனியார் நர்சரிப் பள்ளிகளின் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+