காஞ்சிபுரம்: நெசவாளர்களைக் குறி வைக்கும் அதிமுக, திமுக!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபடுவோம் என்று திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள்உறுதி மொழி அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளராக மைதிலி திருநாவுக்கரசு மற்றும் திமுக சார்பில் பி.எம்.குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.மைதிலியின் கணவர் திருநாவுக்கரசுவின் மரணத்தைத் தொடர்ந்தே இங்கு தேர்தல் நடக்கிறது.
அதேபோல, திமுகவேட்பாளர் பி.எம்.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. முருகேசனின் மகன் ஆவார். இரு வேட்பாளர்களும் வாரிசுவேட்பாளர்கள் என்பதால் போட்டி சுவாரஸ்யமாகியுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக கூறி இருவரும் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
மைதிலி திருநாவுக்கரசு கூறுகையில், காஞ்சிபுரத்தைப் பொருத்தவரை நெசவாளர்கள்தான் அதிகம். அவர்களுக்கு பலபிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்க்க பாடுபடுவேன். சட்டசபையில் அவர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று கூறுகிறார்மைதிலி. இன்று முதல் தீவிர ஓட்டு வேட்டையை அவர் தொடங்குகிறார்.
திமுக வேட்பாளர் பி.எம்.குமார் கூறுகையில், நெசவாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க அதிமுக அரசு தவறி விட்டது. அவர்களதுநீண்ட நாள் கோரிக்கைகள், நீண்ட காலமாகவே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அவர்களது பிரச்சினைகளுக்கு நான்முக்கியத்துவம் கொடுப்பேன்.
எனது தந்தை எம்.எல்.ஏவாக இருந்தபோது காஞ்சிபுரம் தொகுதியில் ஏராளமான தொழிற்சாலைகளைக் கொண்டு வரக்காரணமாக இருந்தார். அதேபோல நானும் அனைத்து வளர்ச்சிகளையும் தொகுதியில் ஏற்படுத்த பாடுபடுவேன் என்றார்.
இரு முக்கியவேட்பாளர்களும் நெசவாளர்களைக் குறி வைத்து தேர்தல் களத்தில் இறங்கியிருப்பதால் இவர்களின் ஓட்டுக்கள்யாருக்குக் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications