காஞ்சி, கும்மிடிப்பூண்டியில் களை கட்டும் தேர்தல் திருவிழா
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக, அதிமுககட்சியினர் வீடுவீடாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் வேட்பு மனு பரிசீலனை நேற்றுடன் முடிவடைந்தது. காஞ்சிபுரம் தொகுதியில் 5மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 22 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் மைதிலி திருநாவுக்கரசுக்கும், திமுக சார்பில் பி.எம்.குமாருக்கும் இடையே கடும் போட்டிநிலவுகிறது. இவர்கள் தவிர இத்தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் இளஞ்செழியன், புதிய நீதிக்கட்சிசார்பில் போட்டியிடும் வெங்கடாச்சல முதலியார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் காஞ்சி நாராயண மூர்த்திஆகியோரும் களத்தில் உள்ளனர். மற்றவர்கள் சுயேச்சைகள்.
கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் கே.எஸ்.விஜயகுமார், திமுக சார்பில் பி.வெங்கடாசலபதி, விடுதலை சிறுத்தைகள்சார்பில் ஜே.பாஸ்கரன், ஏ.ராஜேந்திரன் (அம்பேத்கார் மக்கள் விடுதலை இயக்கம்) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் இப்போதே பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அதிமுக சார்பில்அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டையாடத் தொடங்கிவிட்டனர்.
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி மற்றும் மூத்த தலைவர்கள் இந்த தொகுதிகளில் முகாமிட்டுதேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர். திமுக எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினரும் திமுகவேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் சார்பில் இரு தொகுதிகளிலும் ஏராளமான பெண்கள் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இவர்களும் வீடுவீடாகசென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள். இவர்களை பிரசாரத்திற்கு அழைத்து செல்ல திமுக, அதிமுகவினரிடையே கடும் போட்டிநிலவுகிறது.
தேர்தல் திருவிழா இப்போதே தொடங்கி விட்ட இந்த இரு தொகுதிகளிலும் கொடி மற்றும் தோரணங்களை கட்டுவதில் திமுகமற்றும் அதிமுகவினர் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆங்காங்கே உரசல்களும் தொடங்கிவிட்டன.
இரு கட்சிகளுமே பணத்தை வாரி இறைத்து வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications